Saturday 12 January 2013

கண்ணீர்ப் பயணங்கள்

8


அப்போதெல்லாம்
அப்பாவிடம் ஆயிரம் கேள்விகள் கேட்டபடி
ஆனந்தமான ஒரு சில  ரயில் பயணங்களைக்  கடந்ததுண்டு...
அப்பாவும் மகளுமாக...

இப்போதெல்லாம்
அடிக்கடி ரயில் பயணங்கள்
உறவுகள் பிரிந்ததினாலும்....
பேருந்து கட்டணம் உயர்ந்ததினாலும்...

வெள்ளித் தலையுடன்
அரைக்கை  சட்டை போட்டுக் கொண்டு
அழகான மூக்குக் கண்ணாடியுடன்
அப்பாவின் தோற்றத்தில் ஒருவராவது
எதிரே வந்து அமர்ந்துவிடுகின்றனர்..

அப்பாவே உயிருடன் வந்து அமர்ந்துவிட்டஉணர்வை
கண்ணீர் நொடிக்கொருமுறை நினைவுபடுத்துகிறது...
வேறு கண்கள் கண்ணீரை பார்த்துவிடக் கூடாதென்று
அதே நொடியில்
கண்களே கண்ணீரை விழுங்கிக் கொள்ளும்
கண்ணீர்ப் பயணமாய்க்  கசந்து போகிறது
எனது மகள்கள் இருந்தாலும் கூட...!

Wednesday 26 September 2012

மழை

13



பலரும் பார்க்க 
முரட்டுத் தனமாய்
முத்தங்களைத் தரும் 
 காதலன்...!

Tuesday 11 September 2012

வீர கவி

10


நீ    
விட்டுச் சென்ற 
எச்சில் பருக்கை கூட 
கிடைக்காதா என்று ஏங்கும்
காக்கைகள்   நாங்கள்...! 


Saturday 18 August 2012

ரகசியம்

4


அனைத்தையும் 
எட்டிப் பிடித்தேன்...
எட்டாத 
உன்  நினைவுகளோடு...!


Thursday 16 August 2012

அறுந்து போன செருப்பு

8



அறுந்து போன செருப்பென்று 
வீதியிலே எறிந்தானோ 
தைக்க மனமில்லாமல்........!

Wednesday 4 July 2012

சில்லறை

8

சில்லறைகள் இல்லாமல் 
சின்னச்சிறு கனவுகள் 
சிதைக்கப் பட்டு 
கல்லறைகளாகின்றன
பல  நேரங்களில்..

கல்லறைப் பிணங்கள் கூட 
சில்லறைகள் வாங்கிக் கொண்டு 
சிறைகளை நிரப்புகின்றன 
சில நேரங்களில்...!


Sunday 1 July 2012

காதல் மழை

9

மழைத்துளிகளின் 
முத்தத்தில் நனைந்து 
நாணத்துடன்  
உன் உடலோடு ஒட்டிக் கொண்ட 
வெள்ளைச் சட்டையை 
வேடிக்கை பார்க்க வைத்தது 
இந்த 
இனிய ஜூலை மாதம்....!


 

Friends

Blog List